அதிக போதைப்பாவனையால் இளைஞன் மரணம்!!

 


யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் (02-08-2023) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான லாபீர் றைசூஸ் சமன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்

இந்த நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்று உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அவருடன் சேர்ந்து வியாபாரத்தில் இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து அழைத்துச் சென்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை நேற்று 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

அவர் ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.