முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம்!

 மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாய் பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.