யுவதியின் பழிவாங்கல் செயல்!!

 


முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

குஜராத் - போபாலைச் சேர்ந்தவர் அங்கிதா. சோமேட்டோ டெலிவரி செயலி மூலம் தனது முன்னாள் காதலருக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். அதுவும் கேஷ் ஆன் டெலிவரியில் செய்துள்ளார்.

பலமுறை இதுபோன்று உணவுகளை  ஆர்டர் செய்து முன்னாள் காதலனின் முகவரிக்கு அனுப்பியுள்ளார். எனினும் , அவரின் முன்னாள் காதலர் அந்த உணவை, தான் ஆர்டர் செய்யவில்லை என்று கூறி வாங்குவதற்கு மறுத்துள்ளார்.

இதனை அறிந்த சோமேட்டோ நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“போபாலைச் சேர்ந்த அங்கிதா அவர்களே, தயவு செய்து உங்கள் முன்னாள் காதலருக்கு கேஷ் ஆன் டெலிவரி செய்யும் உணவு ஆர்டரை நிறுத்தி கொள்ளுங்கள். இது போன்று நீங்கள் செய்வது இது 3வது முறையாகும். அந்த ஆர்டர்களுக்கு அவர் பணம் கொடுக்க மறுக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.