வெள்ளத்தில் த்தளிக்கும் இமாச்சலப் பிரதேசம்!!

 இந்தியவின் இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக , மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் 21 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில்   தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்கள், குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலில் மட்டும் இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.7000 கோடி என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இமாச்சலில் பிலாஸ்பூர், சம்பா, ஹமீர்பூர், காங்ரா, குலு, மாண்டி, சிம்லா, சீர்மார், சோலன், உனா, கினார், லாஹால், ஸ்பிதி உள்ள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உத்தராகண்டிலி இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக சோலன் பிரிவு ஆணையர் மன்மோகன் சர்மா தெரிவித்த


இதேபோல் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது கோயிலில் 50 பேர் இருந்ததாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.