பார்வை இழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி!!


 யுத்தத்தில் காயமடைந்து , மிகவும் வறுமையான சூழலில் வாழும் பெண்ணொருவரிற்கு  கனடாவைச் சேர்ந்த பிரசாந் என்பவர்  சுயதொழில் வாய்ப்பிற்காக பசுமாடும்  கன்றும் வழங்கி உதவியுள்ளார். 

ஒரு கண் பார்வையை இழந்ததோடு மறு கண்ணிலும் சரியான பார்வையின்றி உடல் முழுவதும் காயங்களோடு வாழும் இவர்,  தந்தையின்றிய பெண் தலைமைத்துவக் குடும்பத்து  தாயாரோடு வசித்து வருகிறார். 

இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திவிடும் முகமாக  பிரசாந்  இந்த உதவியை வழங்கியுள்ளது பாராட்டிற்குரிய விடயமாகும்.

அத்தோடு கனடாவில் வசித்து வரும்  ராதிகா என்பவரும் குறித்த குடும்பத்தின் நிலையினைக் கருத்தில் கொண்டு ஒரு தொகைப் பணத்தினை வழங்கி வைத்துள்ளார். 

இருவருமே தமது முகம் காட்டாது தொடர்ச்சியாக தம்தேசத்து உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருபவர்கள். 

இவர்களின் இப்பணிக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.