தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!!

 

யாழ். பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரசமரம்  சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் எனத் தெரிவித் ஆர்ப்பாடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) சுழிபுரத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தினைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயம் நோக்கி பேரணியொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் பிரதேச மக்களிடையே எழுந்துள்ளது. இதனையடுத்தே இப்போட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.