அசானிக்கு பின்னணி குரல் கொடுத்த ய கில்மிக்ஷா!
தென்னிந்திய தொலைகாட்சியில் இடம்பெறும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமையால் ஒட்டுமொத்த உலகவாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.
யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா, மற்றும் பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானி ஆகியோரே தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்துகொடுத்துள்ளது தென்னிந்திய தொலைகாட்சியின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி.
இந்த வாரம் நடைபெற்ற பக்தி பாடல்கள் சுற்றில் நடுவர்கள் முதல் சரிகமப அரங்கத்தினையே அசானி பக்தி பரவசப்படுத்தியுள்ளார்.
தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா” என அவர் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அசானிக்கு பின்னணியில் யாழ் குயில் கில்மிசாவும் பாடுகின்றார்.
மலையக குயிலும் ஈழத்து குயிலும் பாடிய பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை