இன்று ஆடிக்கிருத்திகை - சௌபாக்கியம் பெருக இதனைச் செய்யுங்கள்!!

 


முருகப்பெருமான் வழிபாட்டிற்கு செவ்வாய் கிழமை மிகவும் உகந்த நாள். அதுவும் கிருத்திகை நாளில் முருகப் பெருமானை வழிபடுவது இன்னும் சிறப்பு. அந்தவகையில்  இன்றையதினம் (9) ஆடிக்கிருத்திகை தினமாகும்.


ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாக இருந்தாலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய சில விசேஷமான நட்சத்திரங்கள் அந்தந்த நட்சத்திர தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தன்று நாம் முருகரை வணங்கும் போது நம்முடைய வேண்டுதல்களுக்கு பல மடங்கு பலன் உண்டு.

கிருத்திகை வழிபடுவதால் பல மடங்கு பலன்

பொதுவாக வீடு மனை வாசல் வேண்டும் என நினைப்பவர்கள் அங்காரகாரகனின் அருள் தேவை. அந்த தெய்வத்தின் மூல கடவுளாக விளங்குபவர் முருகப் பெருமான்.

எனவே தான் பெரும்பாலும் இது போன்ற தேவைகளுக்கு முருகன் வழிபாடு செய்வார்கள். அதே போல குழந்தை செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதம் இருப்பது கிருத்திகை விரதம் இருப்பது போன்றவை நடைமுறையில் உண்டு.

செல்வம் பெருக இப்படி செய்யுங்கள். 

புதன்கிழமை அன்று ஆடி கிருத்திகை நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு முதலில் உங்கள் பூஜை அறையில் முருகனுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் நெய் தீபமாக இருந்தால் மிகவும் சிறந்தது. அதன் பிறகு மாவிளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதற்கு நீங்கள் மாவிளக்கு போட மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக ஒரு நட்சத்திர கோலத்தை போட்டு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை கோலத்தை சுற்றி எழுத வேண்டும் .

அதன் பிறகு கோலத்தின் நடுவில் வாழஇலை ஒன்றை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவிளத்திற்கான மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக வைத்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரி மலரை வந்து மாவிளக்கை சுற்றி வைத்துவிட்டு நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.


குழந்தை வரம் வேண்டி ஏற்ற வேண்டிய தீபம்

குழந்தை பேறுக்காக வேண்டிக் கொள்பவர்கள் பாலாடை தீபத்தை ஏற்ற வேண்டும். இதையும் அதே போல் கோலத்திற்கு மேலாக ஒரு தாம்பாள தட்டை வைத்து விடுங்கள்.

அந்த தாம்பாள தட்டிற்கு மேல் பாலாடை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து திரி போட்டு நெய் ஊற்றி முருகரை நோக்கி தீபம் ஏற்றுங்கள்.

இந்த விளக்கை சுற்றியும் மலர்களை வைத்து விடுங்கள். இதற்கு நெய்வேத்தியமாக ஒரு டம்ளர் பால் கல்கண்டு கட்டாயமாக வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு இந்த பாலும் கற்கண்டும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு கொடுங்கள் இல்லை எனும் பட்சத்தில் கணவன் மனைவி இருவரும் சாப்பிடலாம்.

இந்த தீபத்தை ஏற்றும் பொழுது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக ஏற்றுவது மிகவும் சிறந்தது.


வீடு மனை சொத்து சேர ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீபம் ஏற்ற ஐந்து வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தையும் அதே போல் முருகப்பெருமான் படத்திற்கு தாம்பாள தட்டிற்கு வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

அந்த தட்டின் மேல் வெற்றிலையை காம்பு உள்புறமும் நுனிவெளிபுறமும் வரும்படி வைத்து விடுங்கள். வெற்றிலையில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

நடுவில் ஒரு அகலை வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள். இந்த தீபத்தை சுற்றியும் மலர் வைத்து உங்கள் வீடு நிலம் சொத்து தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர வேண்டும் என நீங்கள் முருகபெருமானை நினைத்து மனமுருகி  வேண்டிக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் ஏற்றக் கூடாது

 இந்த மூன்று தீபத்தையும் ஒரே நேரத்தில் ஏற்றக் கூடாது. குழந்தை வரம் வேண்டும் என்ற நினைப்பவர்கள் மட்டும் அந்த பாலாடை தீபத்தை ஏற்றலாம்

மற்றவர்கள் மற்ற இரண்டு தீபத்தை ஏற்றலாம். ஒருவேளை மூன்று தீபத்தையும் ஏற்ற வேண்டும் எனில் ஒரு தீபம் ஏற்றி வழிபட்டு அதை குளிர்வித்த பிறகு சிறிது நேரம் இடைவெளி விட்டு அடுத்த தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

மிகவும்  சிறப்பு வாய்ந்த ஆடி கிருத்திகை நன்னாளை தவறவிடாமல் உங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ள இந்த தீப வழிபாட்டை செய்து முருகப்பெருமானின் பரிபூரண அருளும் ஆசியும் கிடைக்கும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.