PickMe யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு!!
யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பல பகுதிகளிலும் குறித்த செயலி பயன்பாட்டில் இருந்தாலும் கூட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக நாளை (01) முதல் அறிமுகப்படுத்துகின்றோம்.
ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து பரிட்சார்த்த நடவடிக்கைகள் இருந்தாலும் கூட நாளை முதல் PickMe செயலியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
முச்சக்கர வண்டி, கார் சாரதிகள் தங்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துபவர் என்றால், குறித்த செயலி மூலம் இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும்.
சாரதிகள் பதிவு செய்ய வாகனத்தின் முன் பக்கம், கரை பக்கம், உள் பக்க படம் , தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் முன் பக்கம், பின் பக்க புகைப்படம், வாகன வரி பத்திரம், வாகன காப்புறுதி பத்திர புகைப்படம், சாரதியின் புகைப்படம் என்பவற்றை வட்ஸப் (WhatsApp) மூலம் அனுப்பலாம்.
பதிந்த பின் சாரதிகளுக்கு ஒரு செயலி வழங்கப்படும். அதில் உங்கள் இரகசிய குறியீட்டின் மூலம் ஒன்லைனில் இருந்தால் போதும்.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் சாரதிகளிடம் தாம் செல்லவேண்டிய இடத்தை செயலி மூலமாக முன்பதிவு செய்வார்கள்.
சாரதிகள் வாகனங்களை பதிந்துகொள்ள 0774737737, 070 374 4444 இலக்கம் மூலமும் வட்ஸப் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை