சுவருக்குள் சிக்கிய சிறுமி மீட்பு!!
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர்.
களுத்துறை - கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
பள்ளியின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை