இலங்கையர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!
தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன. வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மூன்று முறைகளின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குகின்றது. அத்துடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை