போதையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி!!

 


மது அருந்தி விட்டு போதையில் பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட பொலிஸார், மாணவியை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவி மது அருந்தி உள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று , பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரனை நடத்திய போது மாணவியின் தாத்தா தான் தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு மாணவி மது போதையில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEGhttps://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.