அடுத்த மாதம் முதல் திரிபோஷ!!
அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்க மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய அஃப்லாடாக்சிகோசிஸின் அளவு தொடர்பான பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் பல அதிகாரிகளின் இழுபறி காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமான மட்டத்தில் இருப்பதாகவும், இம்மாத இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தேவையான மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் திரிபோஷ பொதிகளை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க முடியும் என்றும் திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.
கருத்துகள் இல்லை