மலைப்பகுதி சொல்வோருக்கு எச்சரிக்கை!!

 


தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலப்பட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நுவரெலியாவில் மலைப்பகுதிக்கு பிரயாணிக்க விரும்பினால் அவர்கள் உரிய அரசஅதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திடமும் இதற்கான அனுமதியை பெறவேண்டியதும் அவசியம்.

அனுமதியின்றி மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.