பெண்களை.. பெண்களே....!!..

 


பெண்களை..

பெண்களே.....

இழித்து கூறுவதென்பது..

இன்னும் இருக்குது மண்ணில்..!

நம்மிடையே விதி வசத்தாலோ.. மதி வசத்தாலோ.. எத்தனையோ "அற்றவள்"கள் இருக்கிறார்கள்..!


1.குடும்பம் அற்றவள்..

2.தாய்மை அற்றவள்..

3.வலு அற்றவள்..

4.யாரும் அற்றவள்..

5.ஏதும் அற்றவள்..

6.வேலை அற்றவள்..

7.கற்பு அற்றவள்..

8.தீர்வு அற்றவள்..


9.கணவன் அற்றவள்..!


மேலே சொன்னது எல்லாம், விதி/இயற்கை/சூழல் அவர்களை ஏதோவொரு வகையில் அற்றவளாய் ஆக்குகிறது.. அவ்வளவே... நிஜத்தில் இவர்களால்ல "அற்றவள்"கள்!


பிறகு யாராம்..!


ஆனால் அதையே காரணம் காட்டி, அவர்கள் மீது வன்மத்தை/விமர்சனத்தை/விஷத்தை கக்கவெனவே சொந்தபந்தம் என்ற பெயரில் இருக்கும் சில "பெண் ஜந்துக்கள்" இருக்குமல்லவா..!


அவர்களே   

1.அறிவு அற்றவள்..

2.மூளை அற்றவள்..

3.அன்பு அற்றவள்..

4.பண்பு அற்றவள்..

5.மாண்பு அற்றவள்..!

6.மானம் அற்றவள்..!


அந்த அற்றவள்களை எல்லாம் கரித்துக்கொட்டும்.. 

இந்த அற்றவள்களை நிச்சயம் திருத்தமுடியாது..!


அப்படியே.. இந்த அற்றவள்களை ஓரமாய் ஒதுங்கிப்போக வேண்டியதுதான்..!


சரி.. 

ஆண்கள் கரித்துக்கொட்டுவதில்லையா..! 

"ஆண் ஜந்துக்கள்" (அற்றவன்) இல்லையா..! 


என்போர்க்கும்

பதில் இருக்கிறது..!


9. கணவன் அற்றவள்..

என்பவள் இவைகளுள் தனி..


இறப்பால்/இயற்கையால் கணவனை இழந்தோர் கிட்டதட்ட 40 மில்லியன் (இந்தியாவில்) என்கிறது ஒரு ஆய்வு..!


ஆனால், 

கடந்த நான்கைந்து வருடம் வரை விவாகரத்து/துணை பிரிதலில் உலகளவில் கடைசி இடத்திலிருந்த (1%) நம் தேசம்..!


அதிலிருந்து 50-60% விறுவிறுவென எகிறுகிறதென்றால்..

என்ன காரணம்..!


சலிப்புத்தன்மையின்மை..

பொறுமையின்மை..

மேலோங்கிய சுதந்திர எண்ணம்..

கோவத்தில் பெரிய முடிவுகளை எடுப்பது..

மேலும்

இன்னோர் இணை மீதான ஈர்ப்பு..(கள்ளகாதல்)..!


இப்படி நிறைய காரணங்களை அடுக்கலாம்..!


இப்போதந்த ஆண் ஜந்துக்கள் இல்லையா..!


இவர்கள்.. பக்கத்து வீட்டு பத்தினியையும்.. படிதாண்ட வைக்கும்..

"கற்புக்கரசர்கள் இந்த ஜந்துக்கள்"..!


 கணவன் "அற்றவளாய்" ஒரு பெண் தனித்து இருந்தால் இன்னும் ஜாலிதான்..

இவர்களுக்கு..!


"நான் இருக்கேன் உனக்கு..!"

என்பதில் ஆரம்பித்து.. எங்கே முடியுமென்பது எவர்க்கும் தெரியாது..

தெரியவரும்போது.. கொலை.. தற்கொலை..ல்

முடிந்திருக்கும்..!

 அற்றவள்களை குத்திக் காயப்படுத்துவதில் அற்றவள்களே அதிகமென்பதால்.. 

இந்த அற்றவள்கள் அந்த அற்றவள்களிடமிருந்து அகன்று நின்று..!


படியுங்கள்..

உழையுங்கள்..

சிந்தியுங்கள்..

உங்களை நீங்களே

நேசியுங்கள்..

உங்களுக்காக

வாழுங்கள்..!


தள்ளிவிடுவார்கள்.. விழுவீர்கள்..


வீரு கொண்டு எழுங்கள்..


உங்கள் பின்புறத்தையும்.. அவர்களையும்.. 

அலட்சியமாய் தட்டிவிட்டு..


மீண்டும்.. 


படியுங்கள்..

உழையுங்கள்..

சிந்தியுங்கள்..

உங்களை நீங்களே

நேசியுங்கள்..

உங்களுக்காக

வாழுங்கள்..!


இம்முறை.. தள்ளிவிட்டோர்.. அவதூறு பேசியோர்..

கால ஓட்டத்தில்..

காணாமல் போயிருப்பார்கள்..! 


வாழ்க வளமுடன்

வாழ்வோம் நலமுடன்..!



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.