மகளின் திருமணத்தை முன்னிட்டு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!
இன்றைய தினம் நோர்வேயை சேர்த்த அமிர்தினி விமலராசன் தம்பதிகளின் அன்பு மகள் அகிலினா அவர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்.
தமது அன்பு மகளின் திருமணத்தினை முன்னிட்டு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் பெற்றோர்
மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது மகளின் மகிழ்வான தருணமதை இல்லாதோர்க்கு உதவிக்கரம் நீட்டி மன நிறைவைக்காணும் குடும்பத்து உறவுகளுக்கு உலருணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
அத்தோடு சமூக ஆர்வலர்களும் திருமண தம்பதிகளுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.
கருத்துகள் இல்லை