திருவிழாவை முன்னிட்டு யாழில் வீதித்தடை!!


நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய பிரதேச  சுற்றுவீதிப்பகுதியில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

.

நாளைய தினம் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.


இதன்படி நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் பருத்தித்துறை வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு எந்த வாகனங்களும் உட்பிரவேசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.