இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!


கொழும்பு, கிராண்ட்பாஸ் 2ஆம் நவகம்புரா பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நவகம்புர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் வந்து குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைப் பிடிக்க கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.