நீங்கள் 

வீதி மறிக்கலாம்

கல் வீசலாம்

தாக்குதல் நடத்தலாம்

பிடித்து அடைக்கலாம்

ஏன் எம்மை கொலை செய்யலாம்


ஆனால்

எம்மவர்களின் அந்த உச்ச தியாகத்தை உங்களால் ஒன்றும்பண்ண முடியாது.

அது உயரிய ஆத்ம சக்தி

அது தெய்வீகமானது

அது உயர்ந்த இலட்சியம் கொண்டது

அது வீரியம் கொண்டது

அது விவேகம் கொண்டது

அது உயர்ந்த தாகம் கொண்டது.

அது உன்னிப்பானது


நீ மூட்டிய தீ 

அது உன்னையே எரிக்கும் ஒரு நாள்


- தருமலிங்கம் சுரேஸ் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.