அங்கே பார் தீபம் எரிகிறது..!


சீரோடு உன் நினைவு

சிந்திக்க வைப்பதனால்

வேரோடு பிடுங்க வந்த 

கூற்றுவனின் கனவெல்லாம் 

தோற்றோடிப் போனது

 

ஆற்றாமை கண்டு 

தோற்றோமே என்று

சீற்றம் மிகக் கொண்டு 

சிங்களம் செய்த செயல்

வெறும் கூற்றாகி போனது


இங்கே பார் தீபம் தனை ஏற்றி

பாருக்குத் தியாகம் தனைச் சொல்லி

பார்த்தீபம் எரிகிறது

பார்  தீபம் எரிகிறது


அணையா நெய் எடுத்து 

அதில் உயிரைத் திரியாக்கி

ஊரெழுவில் உதித்த பிள்ளை 

ஊருக்காய் எரிகிறது


நினைவுகள் பாரமில்லை

கனவுகள் சுமப்பதனால்

நிமிர்வுகள் தோல்வியில்லை

குனிவுகள் தவிர்ப்பதனால்..


கவிப்புயல் சரண்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.