"உலக அமைதியின் சின்னம்"

 


இந்த நூற்றாண்டின் உன்னதமனிதனை எம்மினம் பெற்றெடுத்திருக்கிறது. இறப்புக்கும் அப்பால் இறவாதிருப்பதை உணர்த்திய அந்த மனிதன் எதிர்காலத்தில் எம்மினம் வழிபடும் இறையாகவும், அருள்தரும் ஒளியாகவும் மாறுவான். அங்கிருந்து மீளவும் வேண்டுதல்கள் தொடங்கும்.

உலகின் அமைதியின் குறியீடாக லெப்.கேணல் திலீபன் அவர்களை அறிவிப்பது பற்றி கடந்த மாதம் zoom வழியாக உறவுகளோடு உரையாடியிருந்தோம். கடந்த வாரம் லெப்.கேணல் திலீபன் உருவச்சிலை திருமலையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக "உலக அமைதியின் சின்னம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளை Wiesbaden நகரில் நகரில் நடைபெறும் நிகழ்வில் அதை பொதுமக்களிடத்திலும் அறிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.