வார்த்தை வண்ணம்!!

 


சொற்களை நயம்பட உரைப்பதும் ஒர் கலை..

சிலசமயம் சிந்தித்து செயல்படவும் வைக்கிறது..!

"பேச்சு திறமை.. தொழிலுக்கு பெருமை"

ஒரு வாகனத்தின் பின்புறம்..

வேகத்தை கட்டுபடுத்த..

இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.. " மோதிவிடாதே நண்பா.. மொத்தமும் கடன்"


ஒரு ஆட்டோவில்..

" பெண்ணின் பிரசவம்..

பயணம் இலவசம்"


ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது..

"இருவடை எடுத்து.. ஒருவடை என்பார்..

திருவோடு ஏந்தி.. தெருவோடு போவார்..!"


ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் பின்னால் எழுதப்பட்ட வாசகம்.. 

"உங்களின் வழிச் செலவு.. எங்களின் வாழ்க்கை செலவு..!"


இந்த வாசகம்.. இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது.. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும்.. இந்த வாசகத்திற்கும் எத்தனை வேறுபாடு.. அதனால் தான் சொல்கிறேன்.. சொல்லும் விதத்தில் வெல்லலாம்..!


ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்..

"மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்.. மீனவன் சாப்பிட வேண்டாமா..!"


வார்த்தைகளில் இல்லை வெற்றி.. 

அது வெளிவரும் விதத்தில் தான் இருக்கிறது வெற்றி..!


சொல்ல வந்ததை அழகாக சொல்வதும்.. ஒரு கலை..!


நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல்.. அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. 

வெற்றி நிச்சயம்..!


ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்..

"வீட்டு சமையலுக்கு..

விடுமுறை நாளிலாவது.. விடுமுறை விடுங்கள்..!"


எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும்..!


வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும்..!


சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்..!


வாழ்க வளமுடன்..

வாழ்வோம் நலமுடன்..!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.