பிற்போடப்படும் சாதாரண தரப் பரீட்சை!!

 


சாதாரணத் தரப் பரீட்சைகள் சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர், ஹேமாக பகுதியில் இடம்பெற்ற ஒரு  நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.