கனடாவைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் கூட்டு வாழ்வாதார உதவித்திட்டம்!

 


புலம்பெயர் உறவுகள் சிலர் ஒன்றிணைந்து கிளிநொச்சி,  முல்லைத்தீவு மாவட்டங்களில்  கூட்டு வாழ்வாதார உதவித்திட்டம் முன்னெடுத்துள்ளனர்.

சுஜீபன்..200....dollar

சின்னகிரி..200

திருச்செல்வம் செல்வன்..150

திருச்செல்வம் வசந்த்..150

திருச்செல்வம்..தாரி..100

குணரட்ணம் செருவிம்..100

R,மிது..100

R.குமார்..150

தனேஸ்..100

சலூபன் திவ்ஜன்..200

கிந்துசன்..100

ரம்ஜித்..100

S.சோமசுந்தரம்..50

A.செல்வன்..50

சபாரத்தினம்..தவம்..200 


T.கிருபாகரன்...100 uk pound 


ஆகியோர் இணைந்து மொத்தமாக ஐந்து இலட்சத்து பத்தொன்பதாயிரம் (519,000) ரூபா பணத்தினை இந்த உதவித்திட்டத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்கள். 


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட  ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் (395000) ரூபாவிற்கு லான்மாஸ்ரர் ஒன்றினை பெற்று பயனாளர்க்கு வழங்கி வைத்துள்ளதோடு. அறுபதாயிரம் (60-000) ரூபா தொகை இப்பயனாளரின் மனைவியின் மருத்துவச் செலவிற்காக கையில் பணமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


குறித்த  பயனாளரின் மனைவி நோயாளகியாக மருத்துவமனையில் உள்ளார்.மகனும் செல்லில் பாரிய காயமடைந்து உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். 


அத்தோடு யுத்தத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஆடு ஒன்றும் வழங்கி வைத்துள்ளதோடு யுத்தத்தில் காயமடைந்து கால் ஒன்று உணர்வற்ற நிலையில் இருக்கும் ஒருவர்,   ஓட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளையோடும் தற்காலிக வீடுகூட இல்லாத நிலையில் மனைவியின்றி மூன்று பிள்ளைகளையும் தனித்து வளர்த்து வருகிறார். 


இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுதிப் பணத்தினை வழங்கி வைத்துள்ளார்கள். 


"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" 


என்பதுபோல் எம் உறவுகளின் கூட்டு முயற்சியால் இந்த மூன்று குடும்பங்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 


தம் முகம் காட்டாது வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வுதவிகளை வழங்கி வைத்து அவர்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த புலம்பெயர் தேசத்து உறவுகளுக்கு பயனாளர்கர்கள் மகிழ்வோடு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த முயற்சியைச் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.