பணம் பதுக்கிய இலங்கையர்களுக்கு சிக்கல்!!

 


இலங்கையில் மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க, போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வௌியிட்டுள்ளது.

இதன்படி, பதுக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வைப்பு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்பது தொடர்பில் உலக வங்கியின் சார்பில் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.