தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்த மன்னாரில் அனைவரும் ஒன்றிணைவோம்!!!
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 3.30 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.
தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தியாக தீபம் திலீபன் அவர்களின் "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற கோஷத்தை வலுப்பெறச் செய்து தொடரும் அடக்கு முறையாளர்களின் வன்முறைகளுக்கு எதிர்ப்பையும் தெரிவிக்க அணி திரள்வோம்.
தொடர்ந்தும் திலீபன் அண்ணாவின் இறுதி நாளான 26.09.2023ம் திகதி வரை நடைபெறும் அடையாள உண்ணாவிரதத்திலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இடம்- இலங்கை தமிழரசு கட்சி அலுவலகம்- எழுத்தூர்
காலம்- 23.09.2023
நேரம்- மாலை 3.30
இலங்கை தமிழரசு கட்சி
மன்னார் மாவட்டம்.
கருத்துகள் இல்லை