கஜேந்திரகுமார் MP பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென் மற்றும் எம்.பி.க்கள் ஜுஸ்ஸி சரமோ மற்றும் வெய்ஜோ நிமி ஆகியோருடன் முக்கிய சந்திப்பு
அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளது.
சிறிலங்கா அரசபடைகளினால் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சட்டவிரோத கைதுகள், காணி அபகரிப்புடன் கூடிய பௌத்த மயமாக்கல், உயிர் அச்சுறுத்தல் ,இனஅழிப்பிற்கான நீதி கோருதலில் அனைத்துலக கவனம் போன்ற பலவிடயங்கள் தெளிவாக புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.
பின்லாந்து அரச பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில். இவ்விடயம் தொடர்பாக தங்களுடைய வரையறைக்குட்பட்டு தங்களால் ஆற்றக் கூடிய பங்களிப்பை தாங்கள் மேற்கொள்வோம் என உறுதியளித்தார்கள்
கருத்துகள் இல்லை