மயிலத்தமடுவில் புத்தர் சிலை வைத்த பிக்குகள்!📸

 


காற்றில் பறந்தது ரணிலின் வாக்குறுதி!


மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினரால் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யகம்பத்தும் கலந்துகொண்டார். 


மட்டக்களப்பு மயிலத்தமடுவில் தமிழர்கள் காலம் காலமாக தங்களது கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், அப்பகுதியை தற்போது சிங்களவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவ்ஆக்கிரமிப்பை எதிர்த்து மட்டக்களப்பில் பண்ணையாளர்களினால் 30 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மயிலத்தமடு பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் பொலிஸாரிற்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து சில மணி நேரங்களில் இப்புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.


தமிழர் தாயகத்தில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டுவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.