கொத்தமல்லி தரும் பலன்கள்!!


 மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக அதிக கொலஸ்ட்ரால் சேரும் வாய்ப்பு உள்ளது.

உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன - ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL), மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL). HDL கொழுப்பு நல்ல கொழுப்பாகும், LDL கெட்ட கொழுப்பு.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் நிலை ஹை கொலஸ்ட்ரால் என அழைக்கப்படுகின்றது. இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் அதிகரிக்கும் போது ​​அது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

சில எளிய வீட்டு வைத்தியங்கள் (Home Remedies) மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். 

பச்சை கொத்தமல்லி உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல் இது ரசம், காய்கறிகள், சூப், சாம்பார் என பல வித உணவு வகைகளின் சுவையையும் மேன்படுத்துகிறது.

சுவை, மணம் மட்டுமின்றி இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. கொலஸ்ட்ராலை நீக்கும் குணம் கொத்தமல்லி இலையில் உள்ளது.

இதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இய்து கட்டுப்படுத்தும். 

பச்சை கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் (Home Remedy For Cholesterol) வைக்கலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும் போது, ​​உடல் பருமன் (Home Remedy For Weight Loss) அதிகமாவதில்லை.

இது தவிர இதயம் தொடர்பான அபாயங்களும் குறையும்.

கொத்தமல்லி இலையில் காணப்படும் செரிமான (Digestion) நொதிகள் வயிறு தொடர்பான நோய்களைக் குறைக்கின்றன.

இது அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபையல், ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறன.

சிறுநீரக கற்கள் (Home Remedy For Kidney Stones) உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனைகளையும் கொத்தமல்லி களைகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.