அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

 


கிளிநொச்சியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த அகழ்வு பணிகள் திருநகர் பகுதியில் கடந்த 20-10-2023 அன்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிகள் 17 அடி வரை நடைபெற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்று (22-10-2023) மீண்டும் இடம்பெற்றது.

இன்றைய தினம் அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் எந்த சான்று பொருட்களும் காணப்படாத காரணத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் அகழ்வு பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.