ஆச்சரியம் கொடுத்த அஷானி - அதிருப்தி கொடுத்த கில்மிஷா!!

 


"உள்ளம் கேட்குமே" சுற்றில் தனது அசத்தலான திறனை வெளிப்படுத்திய அசானியின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

அந்த வகையில்,   தனுஷ் - சமந்தா நடித்த தங்கமகன் படத்தில் " என்ன சொல்ல....ஏது சொல்ல...." என்ற பாடலைப்பாடி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

உண்மையில் அந்த மெலோடிப் பாடல் அசானியின் குரலில் அற்புதமாக வெளிப்பட்டது. 

வழமையாக தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திவரும் கில்மிஷா உள்ளம் கேட்கு மே சுற்றில் நடுவர்களுக்கு சற்று அதிருப்தியையே  ஏற்படுத்தினார் எனக்கூறப்பட்ட நிலையில்,  இந்தச்சுற்றில் அஷானி  காட்டிய திறன்  எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடுவர்கள் , அஷானியின் ஆரம்ப நிலையையும் இன்றைய நிலையையும் எடுத்துக் கூறி பாராட்டியதுடன்  இன்று எலிமினேசன் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.