வேலுப்பிள்ளை பி ர பாகரன் : வரலாற்றின் முதலும் கடைசியுமான நிகழ்வு.!


வேலுப்பிள்ளை பி ர பா கரன் போன்ற அதி மனிதர்களின் பாத்திரம் வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அதிசயம்.


உலகின் தலை சிறந்த பல போராளிகளுக்கு, புரட்சியாளர்களுக்கு, கோட்பாட்டாளர்களுக்கு ஏதோவொரு வகையில் ஒரு தொடர்ச்சி இருக்கும்.


அத்துடன் மேற்படி வடிவங்களில் ஏதோவொன்றை பிரதிநிதித்துவப் படுத்துபவர்க்ளாகவே வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.


ஆனால் இதன் ஒட்டுமொத்த கூட்டுருவமாக - குறியீடாக ஒரு சுயம்புவாக வேலுப்பிள்ளை பி ர பா கரன் வரலாற்றை ஊடறுத்து தனித்து நிற்கிறார்.


வேலுப்பிள்ளை பி ர பா கரன் என்ற வரலாற்று பாதிரத்திற்கு எந்த முன்மாதிரியும் கிடையாது. இனியும் இருக்கப் போவதுமில்லை.


அது வரலாற்றின் ஒரு கால கட்டப் பாய்ச்சல்.


அது வரலாற்றில் ஒரு முறைதான் நிகழும் - அது நிகழ்ந்து விட்டது.

ஆனால் அவரது பாத்திரம் போராடும் இனங்களின் மைய விசையாக தன்னை வரலாற்றில் நிரந்தரமாக நிறுத்தி விட்டிருக்கிறது.


பிரபஞ்சத்தில் சூரியனைச் சுற்றி கோள்கள் அசைவது போல் இனி போராடும் தேசிய இனங்கள் இந்த மைய விசையை சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கும்.


அதுதான் குறியீட்டு ரீதியாக வேலுப்பிள்ளை பி ர பா கரனை 'சூரியத்தேவன்' என்று தமிழ் மக்கள் தூர நோக்குடன் முன்பே விளித்திருந்தார்கள்.


எதிரிகள் சூழ நின்றாலும் 'நந்திக்கடல்' செருக்கும் பெருமிதமுமாக அந்த மண்ணில் ஓடிக் கொண்டிருப்பதன் காரணம் இதுதான்.


இது நந்திக்கடலின் கர்வம் அல்ல - இந்த இனத்தின் கர்வம்.


விரைவில் உலகளாவிய தேசிய இனங்களின் நிரந்தரக் கர்வமாக - அடங்காமையாக 'பிரபாகரனியம்' வரலாற்றில் பதிவாகும்.


வல்வெட்டித்துறை யில் பெருக்கெடுத்த விடுதலைப் பேராறு சுற்றிச் சுழன்றோடி நந்திக்கடலில் போய் மையம் கொண்டது.


அது இனி காபூல், பாக்தாத், டார்பர், அலெப்போ, காசா என்று உலகின் சந்து பொந்தெல்லாம் பாயும்.


ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்களும், அவர்களின் கைப்பாவைகளும் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்தபடி முன்னோக்கிப் பாயும்.

அதை வரலாறு "பிரபாகரனியம்' என்று பதிவு செய்து கொள்ளும். ❤️


( தலைவர் அகவை மாத மீள் பதிவு )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.