வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்!


இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.


வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.


வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.


மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.