ஓர் விளக்கையேனும் ஒற்றுமையா ஏற்றி வையுங்க..!


கார்த்திகையும் பூத்திருக்கு

கல்லறையும் காத்திருக்கு
பூப்பறிக்க யார் வருவீங்க-வீரப்
புதல்வர்களை ஏன் மறந்தீங்க..
மாடிவீடு கட்டிக்கிட்டு
கோடிபணக்கட்டுச்சேர்த்து
என்னதான் செய்யப்போறீங்க-பிறந்த
மண்ணை மறந்தா வாழப்போறீங்க.....
குட்டி குட்டி ஆசைகளை
கூடப்பிறந்த உறவுகளை
விட்டு விட்டு
குப்பி கடித்து
கொள்கை காத்தாங்க-அந்த குலதெய்வங்களை
ஏன் மறந்தீங்க-அவர்
குடும்பங்களை
பார்த்துக்கொள்ளுங்க
எங்களோடு இருந்தவரை
எங்களுக்காய் இறந்தவரை
உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்க-அவர்
உறவுகளை பாத்துக்கொள்ளுங்க.
தங்கமேனிப் புதல்வர்களை
தாய்மண்ணுக்காய் புதைந்தவரை
உலகம் எங்கும் எங்கும்
வாழவையுங்க-அந்த
உயிர்களுக்கு விலையேதுமில்லங்க.
ஓர் விளக்கையேனும்
அவர்கள் நினைவு நாளில்
ஒற்றுமையா
ஏற்றி வையுங்க.
தயாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.