திருச்செந்தூரில் செஞ்சொற்செல்வர்...!📸

தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் கந்தசஷ்டி,


விசேட உற்சவத்தில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தினமும் மதியம் 1.00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி வருகின்றார்.


விரதங்களில், அதி முக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டி விரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.


விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல்,


முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


இத்தகைய சிறப்பு மிக்க முருகனின் திருநாளில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச் செந்தூரில் செஞ்சொற்செல்வர் தனது சிறப்பு உரையினை தினமும் ஆற்றி வருகின்றார்.


அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை  எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து


முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால்


கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக  எடுக்கப்படுகின்றது என்ற சிந்தனையினை முருக பக்தர்களிற்கு தனது பேச்சாற்றலால் சொல்லி வருகின்றார்.


அத்துடன் முக்கியமான சமயத் தலைவர்களை சந்தித்து ஆசிகளையும் பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.