மாவீரமும் வீரப்பேச்சும்!


1983  இனக் கலவரத்தோடு மலையகத்தில் இனி வாழ முடியாது எனக் கருதிய மலையக மக்களில் பெருமளவானோர்கள் இலங்கையின் வடக்கு நோக்கி புலம்பெயர்ந்து முதலில் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள் யாழ்ப்பாணிகள் இவர்களிற்கு காணிகளைக் கொடுத்து கலந்து வாழ்வதைத் தவிர்த்து இவர்களைப் புறக்கணித்தார்கள்.


சில மலையக குடும்பங்கள் தங்களது சிறிய ஆண்,பெண் பிள்ளைகளை யாழ் முதலாளித்துவ குடும்பங்களில் வேலைக்காக விட்டு அருகில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் காடுகளில் காணிகளை பிடித்து வசித்து வந்தார்கள்.


ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நிலவுடமை இல்லாத கெளரவமில்லாத கூடாது என்று அழைக்கும் தாழ்த்தப்பட்ட மேட்டுக்குடிச் சமூகத்தோடு கலக்காத மக்கள் கிளிநொச்சியில் காணிகளை பிடித்து வாழ்ந்து வந்ததினால் இவர்களை அவர்கள் ஓரளவிற்கு அரவணைத்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.


யாழ் மாவட்டத்தின் தீவகத்தில் யுத்தம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணமாகவும் தீவகத்து மேட்டுக்குடி மக்களே பெரும்பாலும் விவசாயம் மற்றும் வியாபாரத்திற்காக கிளிநொச்சியில் குடியேறினார்கள்.

இவர்களில் கணிசாமானோர்கள் கொழும்பிலும் மேற்கு நாடுகளிலும் உள்ளார்கள்.


வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மூன்று மாவட்டங்களான கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார் மற்றும் வ்வுனியா மாவட்டத்தின் சிறிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த புலிகளின் ஆளுகைப் பகுதியில் ஏழை எழிய மக்களே வாழ்ந்து வந்தார்கள்.


இலங்கை இராணுவத்திற்கும் புலிகளிற்கும் நடந்த முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதலில் இருந்து இறுதிப்போர்வரை இந்த ஏழை எழிய மலையகம் மட்டக்களப்பு,அம்பாறை,திரிகோணமலை,வன்னி யாழ்பாணத்து வசதியற்ற தாழ்த்தப்பட்டோருமே களமாடி மாவீரா் ஆனார்கள்.


ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும்,அவுஸ்ரேலியாவிலும் நூற்றிற்கு எண்பது விகுதம் யாழ் மேட்டுக்குடிகளும் அதன் வழியை பின்பற்றும் வசதி படைத்தோருமே பெருமளவாக காணப்படுகின்றார்கள்.


ஆனால் தற்போதும் மட்டக்களப்பிலும் வன்னியிலும் ஏன் யாழ்ப்பாணத்திலும் இந்த விடுதலையின் பெயரில் கொடையான குடும்பங்கள் கொட்டும் மழையினில் இருக்க இடமின்றி ஒரு வேளை உணவின்றி அல்லல்ப்படுகின்றார்கள்.


அப்படி இருக்கும் போது மிகவும் பிரமாண்டமாக பணங்களைக் கொட்டி ஆடம்பரமாக தாங்களே விடுதலையின் தூண்கள் என வீரப்பேச்சை மாவீரா் நாளில் சொகுசாக வாழ்வோர்கள் பவனி காட்டி வருகின்றார்கள்.


வே.கேசவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.