பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவுநாள்!📸
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் 1967ம் ஆண்டு பிறந்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்று 1984ம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு பெயராக தினேஸ் என்று பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் 1993ம் ஆண்டு, பூநகரி இராணுவ முகாம் மீது முன்னெடுக்கப்பட்ட "தவளைப் பாய்ச்சல்" நடவடிக்கையில் பங்குபற்றி காலில் காயம் அடைந்ததை தொடர்ந்து பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக 1993ம் ஆண்டு பொறுப்பேற்று 02.11.2007ம் ஆண்டு வீரமரணம் அடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலைப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்ப்பட்டார்.
1994 முதல் 1995ம் ஆண்டு வரை சந்திரிக்கா அரசுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலைமையேற்றுச் செயற்பட்டார். 2002ம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் இணைந்து செயற்ப்பட்டு, அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சாவிற்குப் பிறகு பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களே பேச்சு வார்த்தை அணிக்குத் தலமையேற்றுச் செயற்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்த சேவையை மதிப்பளித்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 2007ம் ஆண்டு „பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்' என கௌரவிக்கப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
நான் அவனை எனது தம்பியாக நினைத்து வளர்த்தேன், தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுகந்திரமாக, கொளரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.'
அன்பான தமிழ் உறவுகளே, பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் இலட்சியத்தை மீட்டெடுக்க அனைத்து தமிழர்களும் ஓரணியில் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .
1.வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன்-ச.பொட்டு!
2.பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பதிவுகள்!(படங்கள்)
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை