மனசெல்லாம் நீங்களே....!
மணியோசை கேட்டு எழுந்து
மனசெல்லாம் மாவீரரை நினைந்து
கல்லறை தேடும் பொழுது
நெஞ்சறையில் ஓடும்
உங்கள் நினைவு!
அது தீராத உங்கள் கனவு!
ஒருபோதும் ஓயாத உங்கள்
உணர்வு!
மனிதவாழ்வின் அத்தனை ஆசைகளையும் துறந்து!
இளமைக்காலங்களின்
இனிதான காலங்களை
இனத்தின் விடுதலைக்காய்
ஈர்ந்து!
இதயத்தின் ஆளத்தில
இனமான உணர்வுகளை ஊட்டி!
கனவுகளை காதலிக்கும்
தியாகத்தின் கூர்மையினை தீட்டி!
தேசத்தின் தாகத்தில் தேகத்தில் தீ மூட்டி!
தமிழினம் மூடிசூடும் காலத்தின்
விதைகளாய் விதைக்கப்பட்ட
தோட்டத்தின் முற்றத்திலே
தண்ணீர் ஊற்றி நிற்கின்றோம்!
இம்மாதமே
உங்களால்
பெருமைகொள்கிறது
உரிமைக்காக
உயிர் போகும் வரையும்
அசையாக் கொள்கையராய்
திசைகள் காட்டி
சென்றீர்!
தோளோடு தோள் சேர்ந்து
போகக்கூடாதென
எதிரிகளின் சதிவலையில்
உதிரிகளாக வீழ்கின்றபோதும்
உங்கள் தியாகங்களே
ஒருதிசையின் ஒளியை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது!
அதிசயமான பிறவிகளாய்
நீங்கள் விதைக்கப்பட்டதால்
உயிரிலே இன்னும் உரிமைக்குரல்
ஒலிக்கின்றது!
நிச்சயம் ஒருநாள்
உங்கள் கனவுகள் மலரும்!
அதை எம்மினம் உணரும்!
அதுவரை
வெட்ட வெட்ட தளிர்க்கும்
மரங்களாய்
எமை தொட்டணைக்கும்
விடுதலைக்காய்
பயணிப்போம்!!
✍தூயவன்
கருத்துகள் இல்லை