அஷானி மற்றும் கில்மிஷாவுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுநரின் அற்புதமான பரிசு!!

 


தென்னிந்தியாவில் ஒளிபரப்பாகும் பிரபல இசை நிகழ்ச்சியான ச ரி க ம ப வில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டு அசானி மற்றும் கில்மிசா  தங்களது அசத்தலான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா பணப்பரிசில்களை நேரிலே சென்று வழங்கினார்.

குறித்த பணத்தொகை, சமீபத்தில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியிலேயே  இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை ரூபாவின் படி அசானிக்கு 10 இலட்சமும் கில்மிஷாவுக்கு 5 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வேளை, மேலும் சில போட்டியாளர்களுக்கும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 சீ தமிழின் சரிகமப இசை நிகழ்ச்சி பலரது மனங்களையும் வென்ற பாடகர்களாக இவர்களை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.