கனடாவில் தமிழ் இளைஞர்களால் பாரிய கொள்ளை முடியடிப்பு!!

 


கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த பாரிய  கொள்ளைச்சம்பவத்தினை, அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.

மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டிக்குள்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பிளாசாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தமிழர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட, சந்தேக நபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது..

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.