பிட்டுச் சாப்பிட்டு இளைஞன் மரணம்!!

 


யாழில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

எனினும் சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்துள்ள நிலையில், இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மேலும் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.