தீபாவளி நாளில் செய்யவேண்டிய பூஜை!!
இந்துக்களுக்கு மிகவும் முக்கியம்வாய்ந்த பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். அந்தவகையில் உலகவாழ் இந்துக்கள் தீபாவளி பண்டிகையினை மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, வாழ்வில் வளமும் நலமும் பெற சில பூஜைகளை செய்தம் மிகவும் நன்று.
அந்தவகையில் தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் மிகவும் சிறப்பான வாழ்வில் வளம்பெற சிறப்பான பலன்களை. மகாலட்சுமி பூஜையும் ஒன்றாகும்,.
திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது.
எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.
சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும்.
ஒருவரின் குடும்பம் சீராகவும், நல்ல முறையிலும், சச்சரவுகள் இன்றியும் நடைபெற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அவசியமானது.
எனவே எந்த பண்டிகையாக இருந்தாலும், வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, முதலில் அவரை வணங்கி விட்டு, பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை