தெருநாய்கள் புலம்பினால்...???

 


(ஒரு கற்பனை)


1. காலையில முற்றம் கூட்டுகிறேன்  என்கிற பெயரில எங்களிலை  தண்ணி ஊத்தி எழுப்பித் துரத்திவிடுவியள்...

எங்க பத்தரை மணி வரைக்கும் அசையும் நித்திரை கொள்ளுற உங்கட புள்ள மேல ஊத்துங்கோ பாப்போம்....


2. மிஞ்சின சாப்பாடு எங்களுக்குத்தானா? ஒரு நாளாவது நல்ல சோறு போட்டிருப்பியளா? நீ எது போட்டாலும் தின்றதுக்கு நான் என்ன உன்ர புருஷனா?


3. லீவு நாளில நீங்கள் நித்திரை கொள்ளுறதுக்காக மதிய நேரம் உன்ர பெடியளை அவுத்துவிடுறியே , அதுகள் எங்கள கல்லை விட்டு அடிச்சு விளையாடுதுகள்,  நாங்கள் எல்லாம் தூங்கறதா,  இல்லையா?


4. எவனையாவது திட்ட வேணும் எண்டாப் போதும்,  யோசிக்காம அறிவுகெட்ட நாயே, சோம்பேறி நாயே, நன்றி கெட்ட நாயேனு ஆரம்பிச்சுடறீங்க ஏன் மூளைகெட்டமுக்தாரு , சோம்பேறி சோமு, நன்றி கெட்ட நரேஷுனு திட்ட வேண்டியதுதானே?


5. நீங்க மட்டும் கூட்டம் கூட்டமா சேர்ந்து கும்மாளம் அடிப்பீங்கள், ஆனா நாங்க நாலு பேர் சேர்ந்தாலே நாய் வண்டியை வரவெச்சு புடிச்சுக் குடுத்துடுறீங்க,  இது எந்த ஊர் நியாயம்கிறோம்?


6. நீ மட்டும் உன் ஆளோட மணிக்கணக்கல கடலை போடுவே,  நான் சுற்றி அடிச்சா மட்டும்   குறுகுறுன்னு பாக்கறதோட கல்லால வேற அடிப்பியள். வயிறெரிஞ்சு சொல்றேன் உங்களுக்கெல்லாம் ஒரு பொண்ணும் உஷாராகாது...


7. உங்களுக்கு காசு கொடுத்து குடும்ப கட்டுப்பாடு பண்ணச்சொன்னாலும் செய்யமாட்டியள்,  ஆனா ரோட்டோரம் கிடக்குற எங்களுக்கு மட்டும்....


8.நாங்க போற ரோட்டிலை நீங்கள் குறுக்க வந்து எங்களை காயம் பண்ணிப்போட்டு எங்களைக் குத்தம் சொல்றீங்களே, எந்த ஊரு நியாயம்?


9.மனுஷன்ல எவனோ ஒருத்தன் பிழை செய்தா அவன் சார்ந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின்  மேலயும் பழியப் போடுற மாதிரி, ஏதாவது ஒரு நாய் கடிச்சா எங்கட ஒட்டுமொத்த சமுதாயத்தையே குற்றவாளி ஆக்குறீங்களே... இது சரியா?


10.எங்களுக்குதான் நல்ல கறி சமைச்சுப் போடுறதில்லை. இப்ப எங்களையே தோலை உரிச்சு,  கறியாக்கி ஆட்டுக்கறி என்று வித்துடுறீங்களே....மனுஷனுங்களடா..நீங்கள்....


கடைசியா ஒன்று,  உங்கட மனுஷப் பயல்களோட மதவெறி, சாதிவெறி, இனவெறி, மொழிவெறிக்கு எங்களோட வெறி எவ்வளவோ பரவாயில்லடா...


உங்களுக்கு மத்தியிலும் நாயா இருக்கிறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்டாப்பா.....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.