கிளிநொச்சியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!!


கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் (19.11.2023) நேற்றைய தினம் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது. இந்த நிகழ்வானது தாயகத்தில் இயங்கும் *அறம் செய் அறக்கட்டளை* யின் ஏற்பாட்டில் *வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம்*  அனுசரணையோடு நடாத்தப்பட்டது. மதகுருமார் மற்றும்  சமூக பிரமுகர்களின் வருகையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், 


 முன்னூற்றைம்பது மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் உரித்துடையோர் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.  அத்தோடு  *தாயகத்தில் ஈகையர் குடும்பத்தாரை போற்றுதல்* என்ற நாமத்தின் கீழ் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்து செயற்படுத்தும் பணியில் அறம் செய் நிர்வாகிகள் செயற்பாட்டாளர்களோடு அறம் செய் கல்விகூட மாணவர் மற்றும் ஆசிரியர்களும் இணைந்திருந்து செயலாற்றினர். 



*இந்த நிகழ்வுக்கான சிறப்பு அழைப்பாளர்களான மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்* களுக்கான அழைப்பானது அந்தந்த குடும்பங்களின் இல்லங்களுக்கே  சென்று அறம் அறக்கட்டளை செயற்பாட்டாளராகளால் முறையாக விடுக்கப்பட்டது.  கிளிநொச்சியை அண்டிய பல கிரமாங்கள்,  முழங்காவில், பூநகரி, பல்லவராயன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பிரதேசங்களை சேர்ந்த மொத்தம் 350 மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த குடும்பங்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களையும் மேலும் பலர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை அதிகம் பெற்றிராத மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


எமது தாயக பிரதேசம் எங்கும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நீடித்த கனமழையானது நிகழ்வுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. எனினும் இன்றைய நிகழ்வுக்கு குறித்த நேரத்திற்கே மக்கள் அனைவரும் ஒன்றுகூடதக்க அளவிற்கு இயற்கை ஒத்துழைத்திருந்து. கிளிநொச்சி பிரதேச செயற்பாட்டில் திரு அன்ரனி அவர்கள் தலைமையிலும், முல்லைத்தீவு செயற்பாடுகள் மாவட்ட செயற்பாட்டாளர் திருமதி காயதிரி அவர்களின் தலைமையிலும், பூநகரி பல்லவராயன்கட்டு செயற்பாடுகள் அறம் செய் செயலாளர் திரு முருகதாஸ்  அவர்கள் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் நிகழ்வு மண்டபத்தை வந்து சேருவதற்கான பேரூந்து ஒழுங்குகளும் செய்யப்பட்டு உரிய நேரத்திற்கு கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்விற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


காலை பத்து மணிக்கு *மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் சிறப்பு இசை வாத்திய அணியினரின் அணிவகுப்பு மரியாதையோடு நிகழ்விற்காக சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் அஞ்சலி கீதங்கள் ஒலிக்க மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.* இதனை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்களால் பொதுசுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அங்கே ஆசியுரைகள், மதிப்பளிப்புரைகள், கலைநிகழ்வுகள், செயற்பாட்டாளர் நிர்வாகிகள் மாணவர் உரைகளோடு நிகழ்வு  தொடர்ந்தது. நிகழ்வில் காலை சிற்றூண்டி தேனீர் வழங்கப்பட்டு மதிய போசனமும் பரிமாறப்பட்டது.



நிகழ்வின் இறுதியாக மாவீரர் குடும்பங்களுக்கான தென்னம்பிள்ளைகள் வழங்கிவைக்கப்பட்டதோடு கூடவே நினைவு பொருட்களாக தாய்மாருக்கான சாறிகளும் தந்தையருக்கு வெள்ளை சாரமும் வழங்கிவைக்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது. இன்நிகழ்விற்கான தன்னார்வ செயற்பாட்டாளர் பணியில் அறம் செய் கல்விகூடங்களான பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி மற்றும் மூங்கிலாறு மாணவர் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.