தங்க மாம்பழத்துடன் பவனி வந்த நல்லூர் கந்தன்!
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் இன்று உள்வீதியுலா வந்தமை பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது
வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூரில் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் காலையில் உள்வீதியுலா வரும் முருக பெருமான், மாலையில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
அந்தவகையில் இன்றைய தினம் காலை தாமரை வாகனத்தில் சிறிய மயிலில் தங்க மாம்பழத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை மாலை சூரன் போர் உற்சவம் இடம்பெறவுள்ளது.
மாலை 4 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவமும் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை