வீதியில் முறிந்து விழுந்த மரம்!!

 


வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (2023.11.14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக வவுனியா - மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பகுதியளவில் பாதிப்படைந்தது.

அதன் பின்னர் சில மணித்தியாலங்களின் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.