காஸாவுக்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம்!!

 


காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இன்று காலை பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் 

வவுனியா மாவட்ட சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பால் குறித்த போராட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியகிழக்கில் பலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வருகின்ற தாக்குதலில்; 4000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய பொருளாதார நலன்களுக்காகவும், போரை உருவாக்கி ஆயுத விற்பனையை விரிவுபடுத்தவும் வேண்டி உலகம் பூராகவும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாக குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.