பலாங்கொடைச் சிறுவன் உலக சாதனை!!

 


2 வயதும் 11 மாதங்களுமான ஆரோன் சாத்விக் என்ற சிறுவன் 100 மீற்றர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனே பலாங்கொடை பெரிய மைதானத்தில் நேற்றைய தினம் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஷ்குமார் ஆகியோரின் முன்னிலையில் குறித்த சாதனையானது நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.