ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு ஈழத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு..!

 


தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பெருமதிப்பிற்குரிய விஜயகாந் அவர்கள் - சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் - மரியாதையும் - பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் அவர்கள் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக விஜயகாந்த் நிறைந்திருந்தார்.
அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு - அவரது இழப்பிலும் அவரது குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதோடு - எமது ஆழமான வருத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
பாராளுமன்ற உறுப்பினர்,
தலைவர்
செ.கஜேந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
பொதுச் செயலாளர்
29.12.2023
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.