யாழில் நகைகளை கொள்ளையிட்ட மர்மகும்பல் !


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில் நேற்று(11.12.2023) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் போது ஒரு பவுண் காப்பும் அரைப் பவுண் மோதிரமும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமையில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பெண் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மழைக்கவச அங்கி மூலம் உடலை முற்றாக மூடி முச்சக்கரவண்டியொன்றில் வந்த மர்ம நபரொருவர் பெண்ணை தாக்கிய நிலையில் இருவரும் பெண் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.